1/12/2011 11:32:08 AM
'வெப்பம்Õ படம் பற்றி இயக்குனர் அஞ்சனா கூறியது: தாயை இழந்து தந்தையால் வெறுக்கப்பட்ட மகன்கள் வறுமையில் வாடுகின்றனர். சிரமத்திலும் தம்பியை கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறான் அண்ணன். இவர்களின் வாழ்க்கையை யதார்த்தமாக சொல்கிறது படம். நானி, நித்யா மேனன், கார்த்திக் குமார், பிந்து மாதவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கவுதம் மேனனின் அசோசியேட் நான். அவரது படங்கள் எப்படி யதார்த்தமாக இருக்குமோ, அதே யதார்த்தம் இதிலும் இருக்கும். காட்சிகளை சொல்வதைவிட படமாக்கப்பட்ட விதம் வித்தியாசமானது. பல காட்சிகள் இயற்கை ஒளியிலேயே படமாக்கப்பட்டது. சென்னையிலும் அதை சுற்றியுள்ள இடங்களிலும் படக் காட்சிகள் செட் போடாமல் யதார்த்தமான லொகேஷனிலேயே படமானது. மயிலாப்பூர் லஸ் மார்க்கெட், பாண்டி பஜார் போன்ற இடங்களில் கேமராவை மறைத்து வைத்து, ஷூட்டிங் நடக்கிறது என்பது வெளியில் தெரியாமலேயே மக்கள் அதிகமாக கூடிய இடங்களில் காட்சிகள் படமாக்கப்பட்டன. நடிகர்கள் என்று தெரியாமலே அவர்களுடன் மக்கள் பேசிய காட்சிகளும் படமாக்கப்பட்டன. 5 பாடல்கள் உள்பட முழுபடமும் 46 நாட்களில் நடந்து முடிந்தது.
Post a Comment