1/25/2011 10:38:37 AM
புதுமுகங்கள் அமீத் பதக், நீது சவுத்ரி நடிக்கும் படம் 'அன்பிற்கு அளவில்லை'. படம் குறித்து இயக்குனர்கள் மரியம் கானசக், ஆனந்த்பாபு கூறியது:
இந்தியாவில் ஆண¢டுதோறும் விவாகரத்துகள் அதிகரித்து வருகின்றன. 2007ம் ஆண்டில் 3,874 விவாகரத்துகள் நடந்ததாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. கடந்த ஆண்டில் மட்டும் 4,643 விவாகரத்துகள் நடந்துள்ளது. குழந்தை பிறந்ததும் கணவன், மனைவி இடையே தூரம் அதிகமாகிவிடுகிறது. குழந்தையை வளர்ப்பதிலேயே அதிக நேரம் செலவிடுகிறார்கள். இதனால் தம்பதி இடையிலான பாசம் குறைந்து விவாகரத்துகள் நடக்கின்றன. இதன் பின்னணியில் இப்படக் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இப¢படத்தை பார்த்து கருத்து வேறுபாடு கொண்ட தம்பதிகள் இணைந்தால் அதுவே படத்தின் வெற்றி. நல்ல கருத்தை சொல்வதால் படத¢தில் நடிப்பவர்கள், டெக்னீஷியன்கள் சம்பளம் தொடர்பாக எந்த ஒப்பந்தமும் போடாமல் பணியாற்றுகின்றனர். படம் முடிந்த பின் நாங்கள் கொடுக்கும் சம்பளத்தை வாங்கிக் கொள்வதாக சிலர் தெரிவித்துள்ளனர்.
Post a Comment