1/28/2011 2:23:29 PM
நடிகை ஸ்ரேயா கூறியது: ஜீவாவுடன் 'ரவுத்திரம்’ படத்தின் ஷூட்டிங் முடிவடைந்த நிலையில் மலையாளத்தில் மோகன்லாலுடன் 'கேசினோவாÕவில் நடிக்கிறேன். இதன் ஷூட்டிங் தாமதமாகிறது. காரணம் தெரியவில்லை. 'போக்கிரி ராஜாÕ படத்தில் மம்முட்டியுடன் நடித்தேன். 2 மலையாள சூப்பர் ஸ்டார்களுடன் நடித்தது சந்தோஷம். விரைவில் இரண்டு சர்வதேச படங்களில் நடிக்க உள்ளேன். அதில் ஒன்று சேகர் கபூர் இயக்கும் 'பானி’. இப்படத்தில் 'ஸ்லம்டாக் மில்லியனர்’ டேனி பாய¢ல் இணை தயாரிப்பில் ஈடுபடுகிறார். ஹிருத்திக் ரோஷன் ஹீரோ. அடுத்து தீபா மேத்தா இயக்கும் 'மிட்நைட் சில்ரன்Õ படத்தில் நடிக்கிறேன். இதற்கு முன் அவரது சகோதரர் திலிப் மேத்தா இயக்கிய 'குக்கிங் வித் ஸ்டெல்லாÕ படத்தில் நடித்தேன். அப்போது தீபாவுடன் பேசும் சந்தர்ப்பம் கிடைத்தது. இம்முறை அவரது இயக்கத்தில் நடிக்க அரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
பிஸியாக நடித்துக் கொண்டிருந்தாலும் சமூக சேவையிலும் கவனமாக இருக்கிறேன். பார்வையற்ற பெண்களுக்கு பயிற்சி அளிக்க மும்பையில் அழகு கலை நிலையம் அமைத்தேன். அங்கு தேர்ச்சி அடைந்தவர்களுக்கு வெளி அழகு நிலையங்களில் வேலை தர தயங்குகிறார்கள். அந்த தயக்கத்தை போக்குவதற்காக போராடப் போகிறேன். சில நேரம் வாடிக்கையாளர்களால் பார்வையற்ற பெண்கள் பாதிக்கும் சூழல் உள்ளது என்பதை அறிந்திருக்கிறேன். அதை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியிலும் ஈடுபட உள்ளேன்.
Post a Comment