1/27/2011 7:35:51 PM
நல்ல காலம் பொறக்குது…
நல்ல காலம் பொறக்குது…
கன்னடம், இந்தி படங்கள்ல உச்ச நடிகரை கெஸ்ட் ரோல்ல நடிக்க வைக்க முயற்சி நடந்துச்சு… நடந்துச்சு… ஆனா, நடிகரு அன்பா மறுத்துட்டாராம்… மறுத்துட்டாராம்… அனிமேஷன் பட ஷூட்டிங்ல மட்டும் இப்போதைக்கு கவனம் செலுத்துறாராம்… செலுத்துறாராம்…
தமிழ்ப் பட ஹீரோ புது முடிவுக்கு வந்திருக்கிறாராம். காமெடி கதைகள்ல, கமென்ட் அடிச்சி நடிக்கிறதை கைவிட முடிவு பண்ணியிருக்கிறாராம்… பண்ணியிருக்கிறாராம்… இனிமே சீரியஸ் ரோல்கள்ல கவனம் செலுத்துப் போறாரம்… போறாராம்…
பஞ்ச் நடிகருக்கு கதை சொல்லி ஓகே வாங்கிட்டாரு எல்லோரும் சுகம்னு சொன்ன பட டைரக்டரு. அதே நேரம், படத்துல பஞ்ச், கமர்ஷியல் அயிட்டங்களை நடிகரு சேர்க்கச் சொல்லியிருக்கிறாராம். நடிகரு விரும்புற மாதிரி அதை சேர்க்க முடியாம இயக்குனரு விக்கிறாராம்…தவிக்கிறாராம்… ரூம் போட்டு பலமுறை டிஸ்கஷன் பண்ணியும் இயக்குனர் சேர்த்த கமர்ஷியல் அம்சங்கள், நடிகருக்கு திருப்தி தரலையாம்… தரலையாம்…
Post a Comment