யாருக்கும் போட்டியில்லை :ரம்யா நம்பீசன்

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
யாருக்கும் போட்டியில்லை : ரம்யா நம்பீசன்
1/5/2011 11:01:52 AM
எடையை குறைத்து ஸ்லிம்மாகியிருக்கிறார் ரம்யா நம்பீசன். சென்னை ஸ்டூடியோ ஒன்றில் போட்டோசெஷனில் இருந்தவரிடம், "என்ன திடீரென்று போட்டோசெஷன்?' என்றபோது அதற்கான காரணத்தை சொன்னார். "சினிமாவுக்கு வரும் முன்பு வாய்ப்பு தேடுவதற்காக போட்டோசெஷன் நடத்தினேன். பிறகு படத்தின் போட்டோக்கள்தான் வெளிவந்தது. கிராமத்து பெண் கேரக்டர், குடும்ப பாங்கான கேரக்டர் படங்களாக அமைந்ததால் அதுபோன்ற போட்டோக்கள்தான் வந்து கொண்டிருந்தது. அதோடு கொஞ்சம் வெயிட் போட்டுவிட்டதாக, தோழிகள் சொன்னார்கள். அதனால் கடந்த 3 மாதமாக, பயிற்சிகள் செய்து எடையை குறைத்து ஸ்லிம்மாகியிருக்கிறேன். புது ரம்யா எப்படி இருக்கிறேன் என்று காட்டுவதற்காக இந்த போட்டோசெஷன்''
கவர்ச்சியாக நடிக்க மறுக்கீறீர்களாமே?
நடிப்பில் கவர்ச்சி என்ற ஒரு பகுதியை பிரிப்பதில் உடன்பாடில்லை. கேரக்டருக்கு என்ன தேவையோ அதை செய்வதுதான் நடிப்பு. சில கேரக்டர்களை என்னால் செய்ய முடியாது. குறிப்பாக மிக குறைந்த உடையில் நடிக்க வேண்டிய கேரக்டரை மறுத்துவிடுவேன். அதற்காக கவர்ச்சியாக நடிக்க மறுத்து விட்டதாக கூறமுடியாது. அப்படி நடிக்க வேண்டிய கேரக்டருக்கு நான் பொருத்தமானவள் இல்லை.
'இளைஞன்' படத்தில் மீரா ஜாஸ்மினுக்கு போட்டியாக நடித்துள்ளீர்களாமே?
நான் யாருக்குமே போட்டியில்லை. அதுவும் மீரா சீனியர் நடிகை. நேஷனல் அவார்ட் வாங்கியவர். அவருடன் நடிப்பதே பெருமை என்று நினைக்கிறபோது போட்டியாக எப்படி நினைப்பேன்? இப்போது மட்டுல்ல, எப்போதும் யாருக்கும் போட்டியாக இருக்க மாட்டேன்.
மலையாள நடிகைகள் தமிழில் நடிக்க அதிகம் ஆர்வம் காட்டுகிறீர்களே?
மற்றவர்கள் பற்றி எனக்குத் தெரியாது. நான் அப்படியில்லை. இப்போதும் மலையாளத்தில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறேன். 'டிராபிக்' என்ற படம் வெளிவர இருக்கிறது. அடுத்து இரு படங்களில்  ஒப்பந்தமாகியிருக்கிறேன். தமிழில் இளைஞனுக்கு பிறகு 'குள்ளநரி கூட்டம்' என்ற படத்தில் விஷ்ணு ஜோடியாக நடிக்கிறேன். இந்தப் படத்தில் கொஞ்சம் காமெடியாக நடிக்க முயற்சிக்கிறேன். நடிப்புக்கு மொழி முக்கியமில்லை. நல்ல கேரக்டர் எங்கு கிடைக்கிறதோ அங்கு நடிப்பேன்.


Source: Dinakaran
 

Post a Comment