1/10/2011 11:31:57 AM
மலையாள படங்களில் நடிக்க தடை விதிக்கப்பட்டதால், கேரளாவில் மேடை நாடகங்களில் நடித்து வருகிறார் திலகன். இந்நிலையில், தமிழில் 'உயிரின் எடை 21 அயிரி' படத்தில் வில்லனாக நடிக்கிறார். இதன் கதை, திரைக்கதை, ஒலி வடிவமைப்பு, இசை, இயக்கம் பொறுப்புகளை ஏற்று ஹீரோவாக நடிக்கும் இ.எல்.இந்திரஜித் கூறியதாவது: 1908ல், டாக்டர் டங்கன் மெக் டஹல் என்பவர், உயிரின் எடை எவ்வளவு என்று, சிலரை வைத்து ஆராய்ச்சி செய்தார். இறப்புக்குப் பின், ஒருவருடைய மொத்த எடையிலிருந்து 21 கிராம் குறைவதாக நிரூபித்தார். அதுவே உயிரின் எடை. இதை, படத்தின் கதையுடன் எப்படி இணைத்திருக்கிறேன் என்பது சஸ்பென்ஸ். தாதாவாக திலகன் வருகிறார். நான் அவரது அடியாள். புதுமுகம் வினிதா, குழந்தை சங்கமித்ரா மற்றும் என்னைச்சுற்றி கதை நகரும். படத்தில் பணியாற்றிய அனைவரையும் நடிக்க வைத்துள்ளேன். வழக்கமான பார்முலாவில் இல்லாத படமாக இருக்கும்.
Post a Comment