தீவிரவாதிகள் கதையில் மேக்னா

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

தீவிரவாதிகள் கதையில் மேக்னா

1/24/2011 12:57:18 PM

'காசி’, 'என் மன வானில்’, 'அற்புத தீவு’ படங்களை இயக்கிய வினயன், அடுத்து 'காதல் வேதம்Õ படத்தை இயக்குகிறார். அவர் கூறியது: வன்முறையும் தீவிரவாதமும் எல்லா நாடுகளிலும் வேரூன்றி இருக்கிறது. அதை எதிர்த்து போராடுவதுதான் இப்படக் கதை. இந்த தலைப்புக்கும் கதைக்கும் சம்பந்தமில்லாததுபோல் தோன்றும். ஆனால் காதல்தான் கதையின் களம். அந்த காதலை எந்த விதத்தில் தீவிரவாதம் நசுக்கப் பார்க்கிறது என்பதுதான் திரைக்கதை. ஹீரோ முரளிகிருஷ்ணா. செகண்ட் ஹீரோ கவுதம். மேக்னா ஹீரோயின். திலகன், சாருஹாசன் சுதந்திர போராட்ட தியாகிகளாக நடிக்கின்றனர். அவர்கள் இருவரும் படத்தில் பேசும் வசனங்கள், அனல் பறக்கும் விதத்தில் இருக்கும். இதன் ஷூட்டிங் கேரளா, பெங்களூர் போன்ற இடங்களில் நடந்துள்ளது. கிளைமாக்ஸ் காட்சிக்காக பெங்களூரில் பெரிய செட் அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் அங்கு ஷூட்டிங் நடக்கிறது.


Source: Dinakaran
 

Post a Comment