1/12/2011 12:38:50 PM
நமீதா என்று சொன்னால் எல்லாருக்கும் நினைவிற்கு வருவது கவர்ச்சி நடிகை என்ற பெயர் தான். திரையில் கவர்ச்சியை தாரளமாக காட்டும் நமீதா, நிஜ வாழ்க்கையில் ஏழைகளுக்கு நல்ல காரியங்கள் செய்வதிலும் தாரணம் காட்டி வருகிறார். சமீபத்தில் சென்னையிலுள்ள பாலவிகாஸ் ஆதரவற்றோர் இல்லத்துக்குச் சென்ற நமீதா அந்த இல்லத்தில் தாய், தந்தை இன்றி வாழும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு இனிப்புகள், பரிசுப் பொருள்கள் மற்றும் உணவு வழங்கி, சிறிது நேரம் அந்தக் குழந்தைகளுடன் விளையாடி மகிழ்ந்தார். இந்த சமூக சேவையை அடிக்கடி காட்டி வரும் நமீதா மற்ற நடிகைகளுக்கு ஒரு எடுத்துக்காட்டாக உள்ளார்.
தற்போது, நமீதாவிடம் நடனப்பள்ளி கனவை விதைத்திருக்கிறது. எல்லாவகை நடனங்களும் கற்றுக் கொடுக்கப்படும் நடனப்பள்ளி ஒன்றை அமைக்க வேண்டும் என்பது நமீதாவின் நீண்ட நாள் கனவாம். அதனை தனியாக செய்ய முடியாது என்பதால் சரியான பார்ட்னர் ஒருவரை தேடிக் கொண்டிருக்கிறாராம். நடனப்பள்ளி அமைக்க என்ன தகுதி என்று யாரேனும் கேட்டுவிடுவார்கள் என்ற அச்சமோ தெரியவில்லை. நான் சின்ன வயசிலேயே பரதநாட்டியம் கற்று வருகிறேன், எல்லாவகை நடனமும் தெரியும், சினிமாவுக்காகதான் வேறு மாதிரி ஆடி வருகிறேன் என்று தன்னிலை விளக்கம் கொடுத்திருக்கிறார்.
Post a Comment