மீனா குழந்தைக்கு பெயர் சூட்டும் விழாவில் சூப்பர் ஸ்டார்!
1/6/2011 10:53:07 AM
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் அனைத்து முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்த மீனா கடந்த 2009, ஜூலை 12ம் தேதி திருப்பதியில் திருமணம் நடந்தது. இந்நிலையில், அவருக்கு ஜனவரி 1ந் தேதி காலை 11.30 மணியளவில் பெண் குழந்தை பிறந்தது. அடுத்து, குழந்தைக்கு பெயர் சூட்டும் விழாவை சைதாப்பேட்டையில் உள்ள மீனா வீட்டில் விமரிசையாக நடத்த ஏற்பாடு செய்துள்ளனர்.
வரும் சனிக்கிழமை இந்த விழா நடக்கிறது. விழாவுக்கு நடிகர் நடிகைகளையும் நெருங்கிய தோழிகளையும் மீனா அழைத்து வருகிறார். குழந்தைக்கு பெயர் சூட்டும் நிகழ்ச்சிக்கு கட்டாயம் வாங்க என்று வேண்டி விரும்பி மீனா அழைத்துள்ளது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை.
Source: Dinakaran
Post a Comment