ரஜினிக்காக கால்ஷீட் அட்ஜெஸ்ட் செய்யும் தீபிகா

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

ரஜினிக்காக கால்ஷீட் அட்ஜெஸ்ட் செய்யும் தீபிகா

1/27/2011 12:47:23 PM

சூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்த படமான சுல்தான் தி வாரியர் தலைப்பு ராணா என்று மாற்றப்பட்டுள்ளது. தன் மகளின் படத்தை முடிப்பதற்காக 20 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளார் ரஜினி. சௌந்தர்யா ரஜினியின் இயக்கத்தில், எந்திரனுக்கு முன்பே துவங்கிய இந்த அனிமேஷன் படத்தின் வேலைகள், எந்திரன் ரிலீசுக்காக தள்ளி வைக்கப்பட்டன. சவுந்தர்யா ரஜினி தயாரிக்கும் அனிமேஷன் படத்தில் ரஜினி நடிக்கும் நேரடி காட்சிகளை கே.எஸ்.ரவிகுமார் இயக்க உள்ளார். மீதி அனிமேஷன் வடிவில் வரும் காட்சிகளை சௌந்தர்யா கவனிக்கிறார். ஏ ஆர் ரஹ்மான் இசையில் 5 பாடல்கள் இடம்பெறுகின்றன. இந்தப் பாடல்களையும் ரவிக்குமாரே படமாக்குவார் என்று தெரிகிறது.

நேரடி காட்சிகளில் வரும் ரஜினிக்கு த்ரிஷா ஜோடியாக நடிப்பார் என தகவல்கள் வெளியாகின. ஆனால் தற்போது தீபிகாவை அணுகியுள்ளனர். ரஜினி படத்திற்காக தன்னை அணுகியிருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார் தீபிகா. இருப்பினும் இன்னும் தான் முடிவெடுக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார். அவருடைய கால்ஷீட் புத்தகம் 2011 இறுதி வரை நிரம்பி வழிகிறதாம். இருப்பினும் ரஜினி படம் என்பதால் அந்த வாய்ப்பை நழுவ விட்டு விடாமல் தக்க வைத்துக் கொள்வதற்காக, கால்ஷீட்டில் அட்ஜெஸ்ட் செய்யும் முயற்சியில் இருக்கிறாராம் தீபிகா.

தான் ஒரு தீவிர ரஜினி ரசிகை என்று கூறியுள்ள தீபிகா, அவருடைய படத்தில் இணைந்து நடிப்பது பெருமைக்குரியது என்றும் கூறியுள்ளார்.


Source: Dinakaran
 

Post a Comment