1/19/2011 6:02:32 PM
'நந்தி' படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் அரைமணி நேரம் வசனம் இருக்காது என்றார் இயக்குனர் தமிழ்வாணன். அகில், சனுஷா நடிக்கும் படம் 'நந்தி'. இம்மாத இறுதியில் ரிலீஸ் ஆகிறது. படம் பற்றி இயக்குனர் தமிழ்வாணன் கூறியதாவது: ஒரு கிராமத்தை நந்தி மாதிரி சுமந்து நிற்கிறான் ஒருவன். அவனைத்தாண்டி அந்த ஊருக்குள் யாரும் எதுவும் செய்ய முடியாது. அந்த நேரத்தில் ஹீரோவுக்கு அங்கு செல்ல வேண்டிய கட்டாயம். செல்கிறான். அங்கு காதல் வயப்படுகிறான். பிறகு என்ன நடக்கிறது என்பது கதை. காமெடிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறோம். இசை அமைப்பாளர் பரத்வாஜ், 25 நாட்கள் பின்னணி இசை அமைத்துள்ளார். கிளைமாக்ஸ் காட்சியில் அரை மணி நேரம் வசனமே இருக்காது. வெறும் பின்னணி இசை மட்டும்தான். 'ரேனிகுண்டா' படத்தில் சனுஷா, வாய்பேச முடியாதவராக நடித்திருப்பார். அதற்கு நேர் மாறாக இந்த படத்தில் அவரது கேரக்டர் அமைந்துள்ளது. லொட லொட என்று பேசிக்கொண்டிருக்கும் கேரக்டர். அவரே டப்பிங் பேசியுள்ளார். அகிலுக்கு இது முக்கியமான படமாக இருக்கும். இவ்வாறு தமிழ்வாணன் கூறினார்.
Post a Comment