ரஜினி படங்களுக்கு மவுசு
1/3/2011 3:33:00 PM
எம்ஜிஆருக்கு அடுத்தபடி ரஜினி நடித்தப் படங்களின் தலைப்புக்குதான் தமிழ் சினிமாவில் அதிக மவுசு. ரஜினியின் தில்லு முல்லு, கழுகு படப்பெயர்களில் படங்கள் தற்போது தயாராகி வருகின்றன.
தில்லு முல்லு படத்தில் வினய் ஹீரோவாக நடிக்கிறார். சத்யசிவா என்பவர் இயக்கம். தில்லு முல்லு டைட்டிலை பயன்படுத்த முறைப்படி அனுமதி வாங்கியுள்ளார்கள்.
அதேபோல் ரஜினியின் பழைய படமான கழுகு தலைப்பிலும் ஒரு படம் உருவாகி வருகிறது. பட்டியல் சேகர் தயாரிக்கும் இந்தப் படத்தில் அவரது மகன் கிருஷ்ணா ஹீரோவாக நடிக்கிறார்.
இதேபோல் மேலும் சில ரஜினிப்பட டைட்டில்கள் கேட்டு சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்களுக்கு கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.
Source: Dinakaran
Post a Comment