1/28/2011 12:56:37 PM
இன்றுள்ள இளம் ஹீரோக்களில் கவுரவ வேடங்களில் அதிகம் நடிப்பவர் ஆர்யாதான். நட்புடன் யார் அணுகினாலும் உடனே ஓகே சொல்லி விடுகிறார். 'ரெண்டு சீன்ல நாம நடிச்சுட்டு போறது ஏதோ ஒரு வகையில அவங்களுக்கு யூஸ்புல்லா இருக்குனா சந்தோஷந்தான் பாஸ்' என்கிறார். கடைசியாக 'பரிமளா திரையரங்கம்' என்ற சின்ன பட்ஜெட் படத்தில்கூட நடித்திருக்கிறார். ஒரு பழைய திரையரங்கை புதுப்பித்து கட்டும் ஹீரோ அதை நடிகர் ஆர்யாவை வைத்து திறக்க ஆசைப்படுகிறார். அதை ஏற்று அந்த சிறிய கிராமத்துக்கு வந்து தியேட்டரை திறந்து வைக்கிறார். இதற்காக ஒரு நாள் கால்ஷீட் கொடுத்து அன்று முழுவதும் பயங்கர கூட்டத்துக்கிடையே நடித்துக் கொடுத்திருக்கிறார். ஆர்யாவின் இன்றைய மார்க்கெட் நிலவரப்படி ஒரு நாள் கால்ஷீட்டின் மதிப்பு பல லட்சங்கள்.
Post a Comment