1/19/2011 6:05:59 PM
ஸ்ரீபாலாஜி இயக்கும் படம், 'குள்ளநரிக் கூட்டம்'. விஷ்ணு, ரம்யா நம்பீசன் ஜோடியாக நடிக்கிறார்கள். படம் பற்றி விஷ்ணு கூறியதாவது:
இது காமெடி படம். காமெடி கேரக்டரில் நடிக்கிறேன். 'பலே பாண்டியா' படத்தில் காமெடி கேரக்டரில் நடித்திருந்தாலும் இதில் முழுநீள காமெடியனாக நடித்துள்ளேன். ரொமான்டிக் காமெடி. மதுரை கதை. 'வெண்ணிலா கபடிக்குழு' படத்தில் நடித்த பெரும்பாலானவர்கள் இதில் நடிக்கின்றனர். எல்லாருமே அதே டீம் என்பதால் ஷூட்டிங் ஜாலியாக இருக்கிறது. காமெடி கேரக்டரில் நடிப்பது கஷ்டம்தான். நாம் சிரிக்காமல் மற்றவர்களை சிரிக்க வைக்க வேண்டும். இதில் திருப்தியாக செய்திருக்கிறேன். எழுபது சதவிகித படம் முடிந்துவிட்டது. இவ்வாறு விஷ்ணு கூறினார்.
Post a Comment