1/20/2011 2:24:38 PM
'மோதி விளையாடு’, 'நான் மகான் அல்ல’ படங்களில் நடித்துள்ள காஜல் அகர்வால் தெலுங்கிலும் பந்தய குதிரையாக ஓடிக் கொண்டிருக்கிறார். இவரது தங்கை நிஷா அகர்வால். மும்பையில் பணிபுரிந்து வந்தார். பத்திரிகை ஒன்றில் அட்டை படமாக நிஷாவின் போட்டோ வந்ததும் தெலுங்கு படத்தில் ஹீரோயினாக அறிமுகப்படுத்தப்பட்டார். தற்போது தமிழ் பக்கம் தனது கவனத்தை திருப்பி இருக்கிறார். அதற்கு அக்கா காஜலின் ஆதரவும் முழுமையாக கிடைத்திருக்கிறது. தன்னிடம் கால்ஷீட் கேட்டு வரும் தயாரிப்புகளிடம் கால்ஷீட் இல்லை என்று கூறாமல் அருகில் இருக்கும் தங்கையை காட்டி, 'இவருக்கு இந்த கதை பொருத்தமாக இருக்கும். அவளிடம் கதை சொல்லுங்கள்Õ என்று வாய்ப்புகளை திருப்பி விடுகிறாராம் காஜல். கூடியவிரைவில் நிஷா அகர்வால் தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளையடிக்க வருவார் என்கிறது கோலிவுட் வட்டாராம்.
Post a Comment