தற்கொலையில் மர்மம் நீடிக்கிறது டைரக்டருடன் ஷோபனா காதலா?வெண்ணிற ஆடை மூர்த்தி பேட்டி

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

தற்கொலையில் மர்மம் நீடிக்கிறது டைரக்டருடன் ஷோபனா காதலா? வெண்ணிற ஆடை மூர்த்தி பேட்டி

1/11/2011 1:05:14 PM

'நடிகை ஷோபனாவின் திடீர் தற்கொலை அதிர்ச்சி அளிக்கிறது. அவர் டைரக்டரை காதலித்தாரா என்பது பற்றியெல்லாம் எனக்குத் தெரியாது' என்று கூறினார் காமெடி நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி. 'ஜெகன்மோகினி', 'சுறா' 'சில்லுனு ஒரு காதல்' உள்ளிட்ட ஏராளமான படங்கள் மற்றும் வெண்ணிற ஆடை மூர்த்தியுடன் டி.வி. காமெடி தொடர்களில் நடித்திருப்பவர் காமெடி நடிகை ஷோபனா (32). இவர் நேற்று காலை கோட்டூர்புரம் குடிசை மாற்று வாரியத்தில் உள்ள தனது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது உடல் ராயப்பேட்டை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கோட்டூர்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

ஷோபனா தற்கொலை பற்றி அவரது அம்மா வைரம் ராணி கூறும்போது,  வங்கிக்கு போய் செக்கை போட்டுவிட்டு வருவதற்குள் வீட்டில் தூக்கு போட்டுக் கொண்டிருக்கிறாள். சிக்கன் குனியாவால் பாதிக்கப்பட்டு சமீபத்தில்தான் குணம் அடைந்தாள். அதனால் சில நாட்கள் ஷூட்டிங் செல்லவில்லை. அவள் தற்கொலை செய்துகொண்டதற்கு சரியான காரணம் தெரியவில்லை. ஷோபனா ஒருவரை காதலித்து வந்தார். அந்த காதல் நிறைவேறவில்லை. இதனால் திருமணமே வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருந்தார். மற்றபடி எந்தப் பிரச்னையும் இல்லை'' என்றார்.

காமெடி நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி இன்று அளித்த பேட்டியில் கூறியது:

நகைச்சுவை உணர்வு அதிகம் உள்ளவர் என்பது மட்டுமல்ல.. தெளிவாக தமிழ் பேச தெரிந்தவர் ஷோபனா. நல்ல ஞாபக சக்தி உள்ளவர். எவ்வளவு பெரிய டயலாக் கொடுத்தாலும் தடங்கலின்றி பேசுவார். அவர் தற்கொலை செய்துகொண்டார் என்ற விஷயம் நேற்று இரவுதான் தெரிந்தது. அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். தொலைக்காட்சியில் 11 வருடம் நகைச்சுவை நிகழ்ச்சி நடத்தி இருக்கிறேன். 9 வருடம் எனது குழுவில் ஷோபனா நடித்திருக்கிறார். சினிமாவிலும் வடிவேலுவுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இன்னும் 2 வருடம் அவர் நடித்திருந்தால் சினிமாவில் சிறந்த நகைச்சுவை நடிகையாக உயர்ந்திருப்பார். அதற்குள் அவசரப்பட்டு இப்படியொரு முடிவை எடுத்தது வருத்தம் அளிக்கிறது'' என்றார்.

'உங்கள் குழுவில் உள்ள டைரக்டரை, ஷோபனா காதலித்ததாக கூறப்படுகிறதே?' என்று வெண்ணிற ஆடை மூர்த்தியிடம் கேட்டபோது, ''அவர் நல்ல நடிகை மட்டுமல்ல, டிசிப்ளினான பெண். அவரிடம் பேசும்போது நடிப்பு பற்றி மட்டும்தான் பேசுவேன். சொந்த வாழ்க்கை பற்றி கேட்டதில்லை. டைரக்டர் அல்லது வேறு யாரையாவது அவர் காதலித்தாரா என்பது பற்றியெல்லாம் எனக்கு தெரியாது'' என்றார்.
நடிகை ஷோபனாவின் தற்கொலையில் மர்மம் இருப்பதால் போலீசார் அவரிடம் நெருக்கமாக பழகியவர்களிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.


Source: Dinakaran
 

Post a Comment