1/24/2011 12:55:47 PM
எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் ஆகியோரின் பாடல்களை ஒரே ஆடியோவில் தொகுத்து வெளியிட்டது சரிகம ஆடியோ. இந் நிகழ்ச்சியில் டைரக்டர் கே.பாக்யராஜ் கூறியது: தத்துவ பாடல்களில் மக்களை கவர்ந்தவர் எம்ஜிஆர். நடிப்பில் கவர்ந்தவர் சிவாஜி. இவர்கள் இருவரிலிருந்து மாறுபட்டு, பெண்களை கவர்ந்தவர் ஜெமினி கணேசன். எம்.ஜி.ஆர் பாடிய தத்துவ பாடல்களான 'சின்னப்பயலே… சின்னப்பயலேÕ, 'காடு வௌஞ்சென்ன மச்சான்Õ, 'தூங்காதே தம்பி தூங்காதேÕ போன்றவை வாழ்க்கையில் நம்பிக்கை தரும் பாடல்களாக அமைந்திருந்தன. அதுபோல் தத்துவ பாடல்கள் பாட இன்றைக்கு நம்மிடம் நடிகர்கள் இல்லை. சில நடிகர்கள் ஏதோ ஒரு சில படங்களில் அது போன்ற பாடல், காட்சிகளில் நடிக்கிறார்கள். அவர்கள் அதை தொடர்ந்து செய்வதில்லை. என் மகன் சாந்தனுக்கு நான் கூறிய அறிவுரை, 'நடிப்பில் சந்தேகமிருந்தால் சிவாஜி படத்தை பார். ஏழை முதல் பணக்காரர் வரை மாஸ் அட்ராக்ஷன் எப்படி பெற வேண்டும் என்பதை அறிய எம்ஜிஆர் படங்களை பார்Õ என்று கூறி இருக்கிறேன்.
Post a Comment