1/24/2011 10:17:26 AM
கூடைப்பந்து பற்றிய படத்துக்காக, தினமும் பயிற்சி செய்து வருகிறார் நகுலன். 'ஈரம்' படத்தை இயக்கிய அறிவழகன், அடுத்து இயக்கும் படத்தில் நகுலன் ஹீரோவாக நடிக்கிறார். ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிக்கும் இந்தப் படம் பற்றி அறிவழகன் கூறியதாவது: டெக்னிக்கலாக மிரட்டிய 'ஈரம்' படத்துக்குப் பிறகு கூடைப்பந்து பற்றிய கதையை இப்போது எடுக்க இருக்கிறேன். இதில் நகுலனுக்கு சிறப்பான வேடம். ஏற்கெனவே சுறுசுறுப்பான முகம் அவருடையது. கூடைப்பந்து வீரருக்கான கேரக்டரில் அவர் பக்காவாக பொருந்துகிறார். இப்போது தினமும் கூடைப்பந்து பயிற்சி பெற்று வருகிறார். நானும் நகுலனுடன் சென்று வருகிறேன். படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. ஹீரோயின் தேடிக்கொண்டிருக்கிறோம். கிடைத்ததும் ஷூட்டிங் தொடங்கும். இந்தப் படம் தமிழ் சினிமாவுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும். இவ்வாறு அறிவழகன் கூறினார்.
Post a Comment