1/20/2011 2:32:41 PM
Ôகள்வனின் காதலிÕ, Ôமச்சக்காரன்Õ படங்களை இயக்கியவர் தமிழ்வாணன். அகில், சனுஷா நடிக்கும் Ôநந்திÕ படத்தை இயக்கி வருகிறார். அவர்
கூறியது: ராமநாதபுரம் அருகே கலையனூர் கிராமத்தில் இப்பட ஷூட்டிங் நடந்தது. கதைப்படி, இந்த ஊரில் முக்கிய புள்ளியாக இருக்கிறார் வில்லன் நித்தேஷ். ஊருக்கு வேலைக்கு வரும் அகில், சனுஷாவை காதலிக்கிறார். இந்த காதலுக்கு நித்தேஷ் தடையாக இருக்கிறார். இத்துடன் கிராமத்தில் நடக்கும் முக்கிய சம்பவங்களையும் பின்னணியாகக் கொண்டு கதை அமைத்துள்ளேன். இதில் 25 துணை நடிகர்கள் தேவைப்பட்டார்கள். அதற்காக கலையனூர் கிராமத்திலும் சுற்றியுள்ள மற்ற கிராமங்களையும் சேர்ந்த 25 பேரை தேர்வு செய்தேன். அவர்களை நடிக்க வைப்பதில் பெரிய சிரமம் இல்லை. காரணம், யதார்த்தமாக வசனம் பேசச் சொன்னேன். அதை சரியாக செய்துவிட்டார்கள். ஆனால் டப்பிங் பேச வைப்பதற்குள் படாத பாடு பட்டேன். டப்பிங் கலைஞர்களை பேச வைத¢தால், கிராமத்து பாஷையும் யதார்த்தமும் அடிபட்டு போகும். அதனால் அவர்களையே பேச வைப்பதில் தீர¢மானமாக இருந்தேன். அவர்களின் லிப் மூவ்மென்ட்டுக்கு ஏற்றது போல் அவர்களால் டப்பிங் பேச முடியாமல் திணறினர். உதவி இயக்குனர்களை வைத்து பயிற்சி கொடுத்தேன். அதற்கே மூன்று நாட்கள் செலவிட்டோம். அதன் பின் ஒரு வழியாக டப்பிங் பேச வைத்து விட்டேன்.
Post a Comment