1/10/2011 11:30:39 AM
முதல்வர் கருணாநிதி கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ள படம் 'இளைஞன்'. சுரேஷ் கிருஷ்ணா இயக்கி உள்ளார். மீரா ஜாஸ்மின், ரம்யா நம்பீசன், நமீதா, சுமன் நடித்துள்ளனர். படம் பற்றி படத்தின் நாயகனும் பாடலாசிரியருமான பா.விஜய் கூறியதாவது: 'இளைஞன்' எல்லா மொழிக்கும், எல்லா மக்களுக்கும் பொருந்தும் கதை. தாய்ப்பாசம் பேணாத மொழியும் இல்லை, தேசமும் இல்லை. 'இளைஞன்' படத்தை பல்வேறு மொழிகளுக்கு மாற்றும் திட்டம் உள்ளது. முதல் கட்டமாக தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழ், மலையாளத்தில் பொங்கல் அன்று வெளிவருகிறது. அதிலிருந்து இரண்டு வாரத்திற்கு பிறகு தெலுங்கில் வெளியாகிறது. படம் வெளிவந்த பிறகு இரண்டாவது வாரத்திலிருந்து படத்தில் நடித்த அனைத்து கலைஞர்களும் தமிழ்நாடு முழுவதும் ஒரு வாரம் சுற்றுப் பயணம் செய்கிறார்கள். தியேட்டர்களுக்கு சென்று ரசிகர்களை நேரில் சந்திக்க இருக்கிறார்கள். பிப்ரவரி மாதத்தில் இதே குழுவினர் தயாரிக்கும் அடுத்த படம் பற்றி அறிவிக்க இருக்கிறோம்.
Post a Comment