காதல் கதையில் ஜாதியை சொல்ல கூடாது

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

காதல் கதையில் ஜாதியை சொல்ல கூடாது

1/28/2011 2:31:38 PM

'பொன்மாலைப் பொழுது’ பட இயக்குனர் ஏ.சி.துரை கூறியது: கவிஞர் கண்ணதாசன் பேரன் ஆதவ் ஹீரோவாக அறிமுகம் படம் இது. ஜோடியாக காயத்ரி நடிக்கிறார். ‘வாங்க காதலில் விழுங்கள்’ என்று இப்படத்திற்கு துணை தலைப்பு தந்திருக்கிறேன். ஏன் அப்படி தலைப்பு வைத்தேன் என்பதற்கு படத்தில் விடை இருக்கும்.  பிளஸ் 2 படிக்கும் டீன் ஏஜ் மாணவர்களின் காதலை சொல்லும் கதை. இது ஜாதியை மையமாக கொண்டதா என்கிறார்கள். ஜாதி, மதம் வைத்து நிறைய காதல் கதைகள் வந்துவிட்டன. மீண்டும் மீண்டும் அதையே படமாக்குவது மக்களின் மனதை அதே பாதைக்கு கொண்டு செல்வதுபோல்தான் ஆகிறது. இயக்குனர்கள் ஜாதி, மதத்தை கடந்து வந்தால்தான் மக்களும் அதை கடப்பார்கள். இப்படத்தில் காதலை புதிய களத்தில் சொல்கிறேன். ஒரு மகன் இப்படத்தை பார்த்தால் தந்தையையும் பார்க்கச் சொல்வான். அதேபோல் தந்தை பார்த்தால் மகனை போய் பார்க்க வலியுறுத்துவார். இதன் ஷூட்டிங் சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் பிப்ரவரியில் தொடங்குகிறது.


Source: Dinakaran
 

Post a Comment