வனிதாவிடமே மகன் இருக்கலாம் :உச்ச நீதிமன்றம்

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

வனிதாவிடமே மகன் இருக்கலாம் : உச்ச நீதிமன்றம்

1/18/2011 2:06:10 PM

நடிகை வனிதாவுக்கும், முதல் கணவர் ஆகாஷுக்கும் பிறந்த விஜய் ஸ்ரீஹரி, தனது தாயிடமே இருக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இதுதொடர்பாக ஆகாஷ் தாக்கல் செய்திருந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. ஜனவரி 18-ந் தேதிக்கு பின்னர் விஜய்ஸ்ரீஹரியை, ஆகாஷ் வனிதாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இதில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. இதை எதிர்த்து ஆகாஷ் உச்சநீதிமன்றத்தை அணுகினார்.
அதில் வனிதாவிடம் விஜய் ஸ்ரீஹரியை ஒப்படைக்க கூடாது. அவனை தன்னுடன் இருக்க அனுமதிக்க வேண்டும் என்று கூறி இருந்தார். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் தற்போது வனிதாவுக்கு சாதகமாக தீர்ப்பளித்துள்ளது. விஜய் ஸ்ரீஹரி, வனிதாவிடம் இருப்பதற்குத் தடை இல்லை என்று நீதிமன்றம் கூறி விட்டது. மேலும் ஆகாஷின் மனுவையும் கோர்ட் தள்ளுபடி செய்து விட்டது.


Source: Dinakaran
 

Post a Comment