1/27/2011 2:18:03 PM
நடிகரும் பாடகருமான எஸ்.பி. சரண் தயாரித்துள்ள படம் ‘ஆரண்ய காண்டம்’. ரவி கிருஷ்ணா, ஜாக்கி ஷெராப், சம்பத், யாஸ்மின் நடித்துள்ளனர். தியாகராஜன் குமாரராஜா இயக்கியுள்ளார். அடுத்த மாதம் ரிலீசாகிறது. சமீபத்தில் இப்படத்தை பார்த்த சென்சார் போர்டு, படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்கியது. அத்துடன் பல காட்சிகளை வெட்டிவிட்டதாம். இதனால் கோபம் அடைந்திருக்கிறார் எஸ்.பி. சரண். இது பற்றி அவர் கூறியது: இந்தப் படம் போதை கும்பலை பற்றிய கதை கொண்டது. அவர்களை பற்றி சொல்லும்போது, துப்பாக்கி, ரத்தம் என காட்சிகள் இருப்பது பெரிய விஷயம் கிடையாது. படத்தில் வன்முறை இருப்பதாகக் கூறி ஏ சான்றிதழ் கொடுத்துள்ளனர். அது கூட பரவாயில்லை. பல காட்சிகளை நீக்கிவிட்டதுதான் தாங்க முடியவில்லை. இதை விட வன்முறை அதிகம் உள்ள பல படங்கள் தமிழில் ரிலீசாகியுள்ளது. அதையெல்லாம் சென்சார் அனுமதித்து இருக்கிறார்கள். சூர்யா நடித்த ‘ரத்த சரித்திரம்’ படத்திலும் நிறைய வன்முறை காட்சிகள் இருந்தன. ஒரு படத்தை குழந்தை போல் நினைத்து பாதுகாக்கிறோம். ஒவ்வொரு காட்சியிலும் அக்கறை காட்டுகிறோம். அந்த காட்சிகளை வெட¢டி எறிவதை சகிக்க முடியவில்லை.
Post a Comment