1/11/2011 12:29:06 PM
நல்ல காலம் பொறக்குது…
நல்ல காலம் பொறக்குது…
மவுன ராக நடிகரு மறுபடியும் நடிக்க வந்ததும் அவரை ஹீரோவா போட்டு படம் எடுத்து ரிலீஸ் பண்ண முடியாம இருந்த தயாரிப்புங்க குஷியானாங்க. எப்படியாவது நடிகரோட ரெண்டு படம் வந்ததுன்னா, அதைக்காட்டி பெட்டில தூங்குற தங்களோட படத்தை ரிலீஸ் பண்ணலாம்னு கணக்கு போட்டாங்க… போட்டாங்க… ரிலீசான படங்கள் சரியா போகல. திரும்ப நடிகருக்கும் வாய்ப்பு வரல. இதனால கணக்கு போட்டவங்க கவலைய¤ல இருக்காங்களாம்… இருக்காங்களாம்…
திருநங்கைகளை பற்றிய நர்த்தகமான படத்துக்கு சென்சார் போர்டு ஏ சர்ட்டிபிகேட் கொடுத்திருக்காங்க. இதை கேள்விப்பட்டதும் திருநங்கைகள் அமைப்பை சேர்ந்தவங்க உர்ராயிட்டாங்களாம்… உர்ராயிட்டாங்களாம்… இது பற்றி சென்சார் போர்டு அதிகாரியிடம் கேட்க, 10 திருநங்கைங்க கூட்டமா போனாங்களாம். உஷாரான அதிகாரிங்க, உதவியாளரை அனுப்பி 'அதிகாரி வெளியே போயிருக்காருÕன்னு சொல்லி வந்தவங்களை திருப்பி அனுப்பிட்டாங்களாம். ஆனா திருநங்கைகளோ 'மறுபடியும் வருவோம்Õன்னு எச்சரிக்கை பண்ணியிருக்காங்களாம்… பண்ணியிருக்காங்களாம்…
செல்வமான இயக்கமும், இளைய இசையும் திரும்ப சேர்ந்து படம் பண்றாங்க.. பண்றாங்க.. அந்த படத்துக்கு ஏற்கனவே இன்ஷியல் இசை போட்ட பாடல் ஒண்ணு பெட்டியில இருக்காம்… இருக்காம்… அதை யூஸ் பண்ணலாம்னு இயக்கம் நினைச்சாராம். ஆனா, அது வேணாம்னு இசை சொன்னதால இயக்கமும் சரின்னு சொல்லிட்டாராம்… சொல்லிட்டாராம்…
Post a Comment