1/6/2011 10:56:22 AM
உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக அறிமுகமாகும் படம் நண்பேண்டா. ரொமாண்டிக் காமெடியான இந்தப் படத்தை சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் படங்களை இயக்கிய ராஜேஷ் இயக்குகிறார்.
நண்பேண்டா படத்தில் உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக நடிக்க ஸ்ருதி கமலிடம் கால்ஷீட் கேட்கப்பட்டதாகவும், தமிழ், தெலுங்கு, இந்தி என மும்மொழிகளில் அவர் பிஸியாக இருப்பதால் கால்ஷீட் தர முடியாத சூழல் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.
தற்போது ஸ்ருதிக்குப் பதில் த்ரிஷாவை ஒப்பந்தம் செயதுள்ளனர். இப்போது த்ரிஷாவுக்கு பதில் ஹன்ஸிகா மோத்வானி நடிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் மார்ச் மாதம் படப்பிடிப்பு துவங்குகிறது.
இதுகுறித்து ஹன்ஸிகா கூறுகையில், “இந்தக் கதை மிக அருமையாக இருந்தது. அதுமட்டுமல்ல, உதயநிதி ஸ்டாலின் எனக்குப் பிடித்த தயாரிப்பாளர். பெரிய பேனர், புதுமுகம் என்றாலும் பெரிய ஹீரோ… சந்தோஷமாக ஒப்புக் கொண்டேன். இந்தப் படம் நிச்சயம் என் வாழ்க்கையில் பெரும் திருப்பு முனையைத் தரும் என நம்புகிறேன்,” என்றார்.
Post a Comment