‘ரோபோ’வுக்கு இரண்டு விருதுகள்!
1/12/2011 12:55:21 PM
1/12/2011 12:55:21 PM
இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் (வட இந்தியப் பதிப்புகள்) ஸ்கிரீன் பத்திரிகை சார்பில் ஆண்டுதோறும் திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டுக்கான ஸ்கிரீன் விருதுகள் வழங்கும் விழா மும்பை அந்தேரியில் மிகப் பிரமாண்டமாக நடந்தது. ரஜினியின் ரோபோ படத்துக்கு ஸ்பெஷல் எஃபெக்ட்ஸுக்காக ஒரு விருதும், படத்தின் நவீன தொழில்நுட்ப உத்திக்காக நடுவர்களின் சிறப்பு விருதும் வழங்கப்பட்டன.
இந்த விழாவில் சிறந்த நடிகருக்கான விருதினை தபாங் படத்துக்காக சல்மான்கான் பெற்றார். சிறந்த நடிகை விருது வித்யா பாலனுக்கு வழங்கப்பட்டது. ஷாரூக்கானின் மை நேம் ஈஸ் கான் படத்துக்கு ராம்நாத் கோயங்கா நினைவு சிறப்பு விருது வழங்கப்பட்டது. Source: Dinakaran
Post a Comment