பாண்டியநாடு தியேட்டர்ஸ் சார்பில் தயாராகும் படம், ‘முத்துக்கு முத்தாக’. ராசு மதுரவன் இயக்குகிறார். கவிபெரியதம்பி இசையில் நா.முத்துக்குமார், நந்தலாலா, உமா சுப்பிரமணியன், ராசு மதுரவன் பாடல்கள் எழுதியுள்ளனர். இதன் பாடல் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. மணிவண்ணன் வெளியிட, ஆர்.கே.செல்வமணி பெற்றார்.
விழாவில் சரண்யா பேசுகையில், ‘இதற்குமுன் ‘களவாணி’ படத்தில் நானும், இளவரசும் ஜோடியாக நடித்தோம். பொருத்தமான ஜோடி என்றார்கள். இந்தப் படத்திலும் நடித்துள்ளோம். மலையாள படங்களில், சின்ன கேரக்டர் கூட ரசிகர்கள் மனதில் நிற்கும்படி அமைந்திருக்கும்.
அதுபோல், இந்தப் படத்தில் நடித்த அனைவரும் ரசிகர்கள் மனதில் நிலைத்து நிற்பார்கள். எல்லா படத்திலும் நான், மகன்களுக்கு அம்மாவாகவே நடிக்கும் வாய்ப்பு அமைகிறது. நிஜத்தில் நான் இரு மகள்களுக்கு அம்மா. ஒரு படத்திலாவது மகளுக்கு அம்மா வேடத்தில் நடிக்க ஆசை’ என்றார்.
விழாவில் இளவரசு, நட்ராஜ், விக்ராந்த், ஹரீஷ், வீரசமர், பிரகாஷ், கஜினி, மோனிகா உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை அருள்ராசன் தொகுத்து வழங்கினார்.
Source: Dinakaran
Post a Comment