1/10/2011 11:46:23 AM
பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய மோனிகா பேடி, அவற்றிலிருந்து விலகி நடித்துள்ள படம், 'தேவதாசியின் கதை'. 3டி ஸ்டுடியோ காம் என்டர்டெயின்மென்ட் கம்பெனி தயாரிக்கிறது. சுவாதி வர்மா, சத்யபிரகாஷ், முகேஷ் ரிஷி, தீபக் நடிக்கின்றனர். இசை, துர்கா. வசனம், அன்பழகன். ஒளிப்பதிவு செய்து படத்தை இயக்கும் கவுதம், நிருபர்களிடம் கூறியதாவது: கதையை கேட்டவுடனே மோனிகா பேடி ஒப்புக்கொண்டார். தன்னால் எந்த பிரச்னையும் வரக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். அவர் நடிக்கும் தமிழ் படம் என்பதால், மீடியாக்களிடம் இருந்து விலகியிருக்க நினைத்தார். எனவே, மும்பை ஸ்டுடியோவில் அவரது காட்சிகளை 3 மாதங்கள் படமாக்கினேன். இந்தியில் 'ஆர்டிஎக்ஸ்' படத்தை இயக்கியுள்ளேன். ஆந்திராவிலுள்ள பெத்தாபுரம் சென்று, தேவதாசிகளின் வாழ்க்கை குறித்து பல மாதங்கள் ஆய்வு செய்தேன். அதன் அடிப்படையில் இதை உருவாக்கியுள்ளேன். வரும் 28ம் தேதி ரிலீசாகிறது.
Post a Comment