வசிஷ்டா பிக்சர்ஸ் சார்பில் இந்துமதி தயாரிக்கும் படம், ‘காதலர் குடியிருப்பு’. அனீஷ், ஸ்ருதி, சரண்யா, அவினாஷ் நடிக்கின்றனர். ஏ.எம்.ஆர்.ரமேஷ் இயக்கியுள்ளார். அடுத்த மாதம் 11&ம் தேதி ரிலீஸ் ஆகிறது. படம் பற்றி நிருபர்களிடம் ரமேஷ் கூறியதாவது:
‘குப்பி’க்கு பிறகு நான் இயக்கியுள்ள உண்மை சம்பவம், இந்தப் படம். பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது, பெங்களூரில் நடந்த சம்பவம் இது. உண்மை சம்பவத்தை படமாக்கும்போது, நிறைய கவனம் தேவை. நிஜ சம்பவங்களுக்கு மாறாக எதையும் மிகைப்படுத்தி சொல்ல முடியாது. காதலர்களின் நிஜ உணர்வுகளை யதார்த்தமாகப் பிரதிபலிக்கும் வகையில், படத்தை உருவாக்கியுள்ளேன். இதில் நடித்த அனைவரும் அந்தந்த கேரக்டராகவே மாறிவிட்டனர். பெங்களூரில் எந்தெந்த பகுதியில் சம்பவம் நடந்ததோ, அங்கு சென்று காட்சிகளை படமாக்கினேன். அனைத்து தரப்பினரும் பார்த்து ரசிக்கும் வகையில், ‘யு’ சான்றிதழ் கிடைத்துள்ளது. இதையடுத்து சந்தனக்கடத்தல் வீரப்பன் கதையை படமாக்குகிறேன். பிறகு பிரபாகரன் கதையை இயக்குகிறேன்.
Source: Dinakaran
Post a Comment