1/20/2011 2:27:45 PM
ஐந்தே நாட்களில் முழு பட ஷூட்டிங்கையும் நடத்த¤ முடிக்க திட்டமிட¢டுள்ளார் ராம் கோபால் வர்மா. குறைந்த பட்ஜெட்டில் குறைந்த நாட்களில் படத்தை எடுப்பதுதான் வர்மாவின் ஸ்டைல். இம்முறை மிகக் குறைந்த நாட்களாக வெறும் 5 நாட்களில் படத்தை எடுத்து முடிக்க உள்ளார். Ôடான்கலா முதாÕ என்ற பெயரில் தெலுங்கில் இப்படத்தை அவர் உருவாக்குகிறார். ரவிதேஜா, சார்மி உட்பட மேலும் சிலர் நடிக்கின்றனர்.
இது பற்றி ராம் கோபால் வர்மா கூறும்போது, ÔÔஇது நிஜமாகவே ஒரு வித்தியாசமான படம். அதனால்தான் குறைந்த நாளில் முழு பட ஷூட்டிங்கையும் நடத¢தி முடிக்கிறேன். பிப்ரவரி 11ம் தேதி ஷூட்டிங் தொடங்கும். 15ம் தேதி முடிந்துவிடும். இதில் சம்பளம் இல்லாமல் அனைவரும் நடிக்கிறார்கள். மொத்தம் 8 பேர்தான் டெக்னீஷியன்கள். இது போன்ற ஒரு புதுமையை யாரும் செய¢ததில்லை. விளம்பரத்துக்காக இதை செய¢யவில்லை. படத்தின் கதை அப்படிÕÕ என்றார்.
Post a Comment