1/31/2011 6:34:08 PM
வர்ஷா பிக்சர்ஸ் சார்பில், சேகர்ராஜன் தயாரிக்கும் படம் 'அய்யன்'. வாசன் ஹீரோ. அவர் ஜோடியாக திவ்யா பத்மினி நடிக்கிறார். மற்றும் சண்முகராஜன், சிங்கமுத்து, கஞ்சா கருப்பு உட்பட பலர் நடித்துள்ளனர். படத்தை இயக்கும் கேந்திரன் முனியசாமி, நிருபர்களிடம் கூறியதாவது:
கிராமத்து காதலையும் அந்த காதலால் ஏற்படுகிற சமூகப் பிரச்னையையும் சொல்லும் படம் இது. ஊதாரியாக திரியும் இளைஞன், ஊர்க்காவல் தெய்வமான அய்யனாக மாறுவதுதான் கதை. படத்துக்கு பெரிய பலமாக இருப்பது இளையராஜாவின் இசை. பாடல்களும் பின்னணி இசையும் சிறப்பாக வந்துள்ளது. இது உண்மை சம்பவத்தின் அடிப்படையிலான கதையா என்கிறார்கள். நம் வாழ்க்கையில் ஒவ்வொருவருக்குள்ளும் நடக்கிற உயிரோட்டமான சம்பவத்தை சொல்லியிருக்கிறேன். அது என்ன என்பது சஸ்பென்ஸ். முழுவதும் முதுகுளத்தூரைச் சுற்றி படமாக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு கூறினார். முன்னதாக, இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. இளையராஜா வெளியிட இயக்குனர் ஜனநாதன் பெற்றார்.
Post a Comment