தெலுங்கில் பிரீத்திகா
2/16/2011 3:27:32 PM
தமிழில் 'சிக்கு புக்கு' படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் பிரீத்திகா ராவ். இந்தி நடிகை அம்ரிதா ராவின் தங்கை. இவர், இப்போது தெலுங்கு படத்தில் நடிக்கிறார். இதுபற்றி பிரீத்திகா கூறியதாவது: தெலுங்கில் வருண்சந்தோஷ் ஜோடியாக புதிய படத்தில் நடிக்கிறேன். யு.கே.அவென்யூஸ் சார்பில் பி.உதயகிரண் தயாரிக்கிறார். இது காதல் கதை என்றாலும் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டர். ஷ்ரவான் இயக்குகிறார். சமீபத்தில் போட்டோஷூட் நடந்தது. எங்கள் ஜோடி கண்டிப்பாகப் பேசப்படும் என நினைக்கிறேன். இதையடுத்து தமிழில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இவ்வாறு பிரீத்திகா கூறினார்.
Source: Dinakaran
Post a Comment