2/12/2011 10:39:20 AM
தமிழ் சினிமா உட்பட அனைத்து மாநில கதாநாயகிகளும் ஒரு முறையாவது சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடிக்க ஆசை இருக்கும். அப்படிப்பட்ட ஆசைகளும் சமீரா ரெட்டிக்கும் இருக்கு என்ற விஷயம் தற்போது தெரியவந்துள்ளது. வாரணம் ஆயிரம், படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகம் ஆனவர் சமீரா ரெட்டி. அசல் படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக நடித்தார். இப்போது கவுதம் மேனன் இயக்கியுள்ள ‘நடுநிசி நாய்கள்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் பிப் 18-ம் தேதி வெளியாகிறது. தமிழ்ப் பட அனுபவங்கள் பற்றி சென்னையில் சமீரா ரெட்டி நேற்று அளித்த பேட்டியில் நான் சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் இளைய தளபதி விஜய்யின் தீவிர ரசிகை, அவர்களது படங்களில் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் ஆசை என்று கூறினார்.
Post a Comment