2/26/2011 10:42:51 AM
'வந்தான் வென்றான்Õ படம் பற்றி இயக்குனர் கண்ணன் கூறியது: பிடிவாதமான ஒரு வாலிபனும் இளம்பெண்ணும் தங்கள் லட்சியங்களை, வாழ்க்கையில் எதையுமே இழக்காமல் எப்படி அடைக்கின்றனர் என்பதுதான் கரு. ஜீவா, டாப்ஸி ஜோடி. இதன் ஷூட்டிங் இப்போது மைசூர் மேல்கோட்டை காட்டுப் பகுதியில் நடக்கிறது. இதற்கு வனத்துறையிடம் சிறப்பு அனுமதி பெற்றிருக்கிறோம். மரம் வெட்டக்கூடாது,
தீ மூட்டக்கூடாது என்று நிறைய நிபந்தனைகளுடன் ஷூட்டிங் நடக்கிறது. இதற்காக கேரளாவிலிருந்து பெண் நடன கலைஞர்கள் அடங்கிய கதகளி மற்றும் களறி குழுவினர் 20 பேர் வரவழைக்கப்பட்டுள்ளனர். தினேஷ் மாஸ்டர் அமைக்கும் இந்த நடன காட்சி பேசப்படுவதுடன், படத்துக்கு ஹைலைட்டாக இருக்கும். கேரள பெண்கள் ஆடும் பாரம்பரிய நடனமும் இடம்பெறுவதால், அதற்காக பயிற்சி பெற கேரளா செல்கிறார் ஹீரோயின் டாப்ஸி. தகுதி வாய்ந்த ஆசிரியரிடம் முறைப்படி கதகளி பயிற்சி பெற்ற பிறகே ஷூட்டிங்கில் பங்கேற்கிறார். இதையடுத்து மும்பையில் பாந்த்ரா, ஒராளி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புதிய மேம்பாலம் அருகில் செட் அமைத்து ஷூட்டிங் நடக்கிறது.
Post a Comment