2/7/2011 2:31:02 PM
பிருத்விராஜ், பிரகாஷ்ராஜ் நடிப்பில் மலையாளத்தில் வெளியான 'அன்வர்Õ படம், தமிழில் விரைவில் வருகிறது. இதுபற்றி இயக்குனர் அமல்நீரத் கூறியது: தீவிரவாதத்தால் நாட்டிற்கு ஏற்படும் பாதிப்பு, அதை களைய மக்கள் என்ன செய்ய வேண்டும் என்பதே கதை. கோவை குண்டு வெடிப்பு முதல் மும்பையில் தீவிரவாதிகள் தாக்கிய சம்பவம் வரை கோர்வையாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. மும்பை தாக்குதலின்போது காவல்துறை அதிகாரி கர்காரே வீரமரணம் அடைந்தார். அவரது கதாபாத்திரத்தை மையமாக கொண்ட வேடத்தில் பிரகாஷ் ராஜ் நடிக்கிறார். இதுபற்றி அவர் கூறும்போது, 'இப்படியொரு கேரக்டரில் நடித்ததை மிகப் பெருமையாக கருதுகிறேன்' என்றார். மதத் தலைவர் ஒருவருடைய கையாளாக பிருத்விராஜ் நடிக்கிறார். ஹீரோயினாக மம்தா மோகன்தாஸ் நடிக்கிறார். இப்படத்துக்காக குண்டு வெடிப்பு சம்பவங்கள் படமாக்கப்பட்டன. குண்டு வெடிப்பின் கொடூரம் என்ன என்பதை இக்காட்சி தத்ரூபமாக விளக்கும். இம்மாத இறுதியில் படம் திரைக்கு வருகிறது.
Post a Comment