நிருபராகும் நகுலன்
2/3/2011 3:32:03 PM
இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான். ‘சச்சின்’ படத்தை இயக்கியவர். அதற்கு பின் சில படங்களை இயக்க முயன்றார். இப்போதுதான் அதற்கான வாய்ப்பு அமைந்திருக்கிறது. நகுலன் நடிப்பில் Ôதலைப்புச் செய்திகள்’ என்ற படத்தை இயக்க உள்ளார். இதில் பத்திரிகை நிருபராக நடிக்கிறார் நகுலன். “இந்த வேடம் எனக்கு புதிது. இதற்காக நிறைய பயிற்சி பெற முடிவு செய்திருக்கிறேன். விறுவிறுப்பான திரைக்கதையுடன் கூடிய படமாக இது இருக்கும். இதில் நடித்த படியே ‘ஈரம்’ அறிவழகன் இயக்கும் படத்திலும் நடிக்கிறேன்” என்றார்.
Source: Dinakaran
Post a Comment