இனி பாடுவதாக இல்லை : யுவன்
2/3/2011 5:08:46 PM
தற்போது தமிழ் சினிமாவில் மிகவும் பிசியாக இருக்கும் மியூசிக் டைரக்டர்
யுவன் சங்கர் ராஜா. அவரது படங்களில் ஏதாவது ஒரு பாடலாவது ஹிட்டாகிறது.
மேலும் சென்ற அவர் இசையமைத்த, பையா, நான் மகான் அல்ல, பாணா காத்தாடி, பாஸ்
என்கிற பாஸ்கரன் போன்ற படங்களில் இசை பெரிதும் பேசப்பட்டது. அவர் குரலுக்கு
தனி ரசிகர் பட்டாளமே உருவாகிவிட்டது. இந்த நிலையில், இனி பாடுவதில்லை என்ற
அதிர்ச்சிகரமான முடிவை இன்று அறிவித்துள்ளார். தனது ட்விட்டரில் “இனி
பாடுவதில்லை என்பதுதான் அந்த முடிவு. எவ்வளவு காலத்துக்கு என்பது
தெரியவில்லை. ஆனால் இப்போதைக்கு பாடுவதாக இல்லை”, என்று
குறிப்பிட்டுள்ளார்.
Source: Dinakaran
Post a Comment