ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பை இழந்த மாதுரி தீட்சித்

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பை இழந்த மாதுரி தீட்சித்

2/22/2011 2:56:28 PM

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படம் ராணா; படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்குகிறது. ஆக்கர் ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து ஈராஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் 'ராணா' என்ற பெயரில் புதுப்படம் தயாரிக்கிறது. இந்த படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த முத்து, படையப்பா படத்தை இயக்கிய கே.எஸ்.ரவிக்குமார் இயக்குகிறார்.

இதில், ரஜினிகாந்த் 3 மாறுபட்ட வேடங்களில் நடிக்கிறார். அவர் ஏற்கனவே மூன்று முகம் படத்தில் 3 வேடத்தில் நடித்தார். அதன்பின் இப்போது 3 வேடத்தில் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் உருவாகும் இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். ரத்தினவேலு ஒளிப்பதிவும். பட தொகுப்பை ஆன்டணியும் கவனிக்கின்றனர். டெக்னிக்கல் ஸ்பெஷல் எபக்ட்ஸ் விஷயங்களை சவுந்தர்யா ரஜினிகாந்த் கவனிக்கிறார். இந்நிலையில் ரஜினியின் ஒரு கதாபாத்திரத்துக்கு ஜோடியாக மாதுரி தீட்சித் நடிக்க வேண்டியிருந்ததாம். ஆனால் தன்னுடைய குடும்பத்தை பார்க்க அமெரிக்கா செல்வதால் ரஜினியுடன் 'ராணா' படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்திருக்கிறார் மாதுரி தீட்சித்.





Source: Dinakaran
 

Post a Comment