2/26/2011 10:16:04 AM
வர்னிகா மூவி மேக்கர்ஸ், கே.எஸ்.பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் படம், 'அகராதி'. பிரதீப், மோனிகா, ஓவியா நடிக்கின்றனர். படத்தை இயக்கும் நாகா வெங்கடேஷ், நிருபர்களிடம் கூறியதாவது: படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்து விட்டது. சென்சார் குழுவினர், முதலில் 'யு' சான்றிதழ் அளித்தனர். பிறகு வாலி எழுதி பிரதீப், அர்ச்சனா நடித்த ஒரு பாடல் காட்சியை பார்த்துவிட்டு, 'ஏ' சான்றிதழ் கொடுத்தனர். நாய் வரும் காட்சிக்கும் எதிர்ப்பு வந்தது. பிறகு போராடி, யு/ஏ சான்றிதழ் பெற்றோம். கிரைம், பேமிலி சென்டிமென்ட் கலந்து உருவாகியுள்ள இப்படம், மார்ச் 4-ம் தேதி ரிலீசாகிறது. அண்ணன், தங்கையின் பாசத்தை சொல்லும் இக்கதை, கிளைமாக்ஸில் தடாலென மாறும். அண்ணனாக பவன், தங்கையாக மோனிகா நடித்துள்ளனர்.
Post a Comment