2/19/2011 12:50:12 PM
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி துவக்க விழா வங்கதேச தலைநகர் டாக்காவில் நேற்று முன்தினம் கோலாகலமாக நடந்தது. இவ்விழாவில், 'காதலில் விழுந்தேன்' படத்தில் இடம்பெற்ற 'நாக்க முக்க' பாடலும் இடம்பெற்றது. இதுபற்றி இதன் இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனியிடம் கேட்டபோது கூறியதாவது: உலகமே ஆர்வமாக எதிர்பார்க்கும் கிரிக்கெட் போட்டி துவக்கவிழாவில் 'நாக்க முக்க' பாடல் இடம்பெற்றது மகிழ்ச்சியான விஷயம். பொதுவாக குத்துப்பாட்டு என்ற வகையில் சில பாடல்களை புறக்கணிக்கிறார்கள். ஆனால், அந்த வகையில் இடம்பெற்ற 'நாக்க முக்க' பாடலுக்கு இவ்வளவு வரவேற்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சியான விஷயம். பறை, தப்பட்டை, தாரை போன்ற இசைக்கருவிகளை கொண்டு உருவாக்கப்படும் கிராமிய பாடலுக்கான வரவேற்பும் எதிர்பார்ப்பும் உலகம் முழுவதும் இருக்கிறது என்பதற்கு இந்தப் பாடல் சாட்சியாக இருக்கிறது.
Post a Comment