சிங்கமும் சிறுத்தையும் பாலிவுட் செல்கிறது!
2/14/2011 3:50:51 PM
சன் பிக்ச்ர்ஸ் கலாநிதி மாறன் வழங்கிய, சூர்யா நடித்த சிங்கம் பாலிவுட் ரீமேக் ஆகிறது. தமிழில் சூப்பர் ஹட்டான சிங்கம், இந்தியில் ரீமேக் செய்யும் போது எதிர்பார்ப்பு நூறு சதவீதமாக மாறியுள்ளது. சிங்கத்தில் சூர்யா நடித்த நரம்பு புடைக்கும் போலீஸ் ரோலை அஜய் தேவ்கான் செய்கிறார். சூர்யா அளவுக்கு ஒன்றரை டன்னில் ஓங்கி அடிக்க அஜய் தேவ்கானால் முடியுமா என்பது சந்தேகம். அஜய் தேவ்கானுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிப்பார் என தெரிகிறது.
இதே போல் சூர்யாவின் தம்பி கார்த்தி நடித்து சமீபத்தில் சூப்பர் ஹிட்டான சிறுத்தை படமும் இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. ஆனால் யார் ஹீரோ, ஹீரோயின், இயக்குனர் இன்னும் முடிவாகவில்லை.
Source: Dinakaran
Post a Comment