திருமணத்துக்குப் பிறகு நடிக்க மாட்டேன் :நயன்

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

திருமணத்துக்குப் பிறகு நடிக்க மாட்டேன் : நயன்

2/5/2011 11:56:55 AM

திருமணத்துக்குப் பிறகு நடிக்க மாட்டேன் என்று நயன்தாரா கூறியுள்ளார். பிரபுதேவா இயக்கிய 'வில்லு' படத்தில் நடித்தார் நயன்தாரா. அப்போது இருவரும் காதல் வயப்பட்டனர். இதை பிரபுதேவாவின் மனைவி ரமலத் எதிர்த்தார். பின்னர் விவாகரத்துக்கு சம்மதம் தெரிவித்து, இருவரும் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். ஜுன் மாதம் இதற்கான தீர்ப்பு வருகிறது. இதையடுத்து அதே மாதம் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர். தற்போது, 'ராமராஜ்யம்' என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார் நயன்தாரா. இந்த படத்துக்குப் பிறகு சினிமாவை விட்டு விலக அவர் முடிவு செய்துள்ளார். இதுபற்றி ஐதராபாத்தில் நயன்தாரா கூறியதாவது:

இனி, சினிமாவில் நடிக்க வேண்டாம் என பிரபுதேவா கூறியிருக்கிறார். அதனால் திருமணத்துக்குப் பிறகு நடிக்க மாட்டேன். 'ராமராஜ்யம்' படம் தான் கடைசி படம். இதில் சீதையாக நடித்து வருகிறேன். சினிமா வாழ்வில் இந்த கேரக்டரில் நான் நடித்ததை மறக்க முடியாது. பிரபுதேவாவுக்கும், எனக்கும் தகராறு நடப்பதாக செய்திகள் வருவதில் உண்மையில்லை. எங்களுக்குள் எந்த பிரச்னையும் இல்லை. இப்போது நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் திருமணம் செய்து கொள்ள இருக்கிறோம். திருமணத்துக்கு பின் நல்ல மனைவியாக இருக்க விரும்புகிறேன். இவ்வாறு நயன்தாரா கூறியுள்ளார்.


Source: Dinakaran
 

Post a Comment