2/2/2011 12:12:02 PM
'ரீமிக்ஸ் பாடலுக்கு இசையமைக்க மாட்டேன்' என்றார் சுந்தர்.சி பாபு. இதுகுறித்து அவர் கூறியதாவது: தற்போது 'அகராதி', 'மார்க்கண்டேயன்', 'வேலூர் மாவட்டம்' படங்களுக்கு இசையமைக்கிறேன். இதுவரை என் இசையில் நான் பாடியது இல்லை. காரணம், என் குரல் வளத்தை பற்றி எனக்கு நன்றாக தெரியும். நான் பாடி ரசிகர்களை கஷ்டப்படுத்த விரும்பவில்லை. பாடல்கள் உருவாகும்போது, டிராக் மட்டும் பாடுவேன். டாக்டர் அறிவுரைப்படி உடற்பயிற்சி செய்கிறேன். இதை வைத்து, ஹீரோவாக நடிக்க தயாராகி வருவதாக சிலர் சொல்கின்றனர். அது உண்மை இல்லை. ரீமிக்ஸ் பாடல்களுக்கு இசையமைக்க கூடாது என்பதை கொள்கையாக வைத்திருக்கிறேன். நான் இசையமைக்கும் பாடலே சிறப்பாக இருக்கும்போது, இன்னொருவர் இசையில் உருவான பாடலை நான் ஏன் ரீமிக்ஸ் செய்ய வேண்டும்?
Post a Comment