2/11/2011 3:35:57 PM
'வந்தான் வென்றான்' படத்துக்காக, ஜீவா குத்துச்சண்டை கற்று வருகிறார்.வாசன் விஷுவல் நிறுவனம் சார்பில் கே.எஸ்.சீனிவாசன் தயாரிக்கும் படம் 'வந்தான் வென்றான்'. ஜீவா, டாப்ஸி நடிக்கிறார்கள். படம் பற்றி இயக்குனர் ஆர்.கண்ணன் கூறியதாவது: 'வந்தான் வென்றான்' எல்லா அம்சங்களும் நிறைந்த ஆக்ஷன் படம். படத்தின் ஹீரோ ஜீவா குத்துச்சண்டை வீரர். அவரை ஒரு சம்பவம் மும்பை வரை துரத்துகிறது. அதை அவர் எப்படி வென்று திரும்புகிறார் என்பது கதை. ஜீவாவின் தொழில் குத்துச்சண்டை என்பதை தவிர, படத்தில் குத்துச்சண்டைக்கென்று பெரிய முக்கியத்துவம் எதுவுமில்லை. படத்தின் ஷூட்டிங் கேரள-கர்நாடக எல்லை காட்டுப்பகுதியில் ஜீவா, டாப்ஸி நடிப்பில் 23 நாட்கள் படமானது.
Post a Comment