எதிரியை துவசம் செய்யும் விஷால்
2/2/2011 12:34:35 PM
பாலா இயக்கத்தில் ஆர்யா, விஷால் நடிக்கும் 'அவன் இவன்' படத்தின் ஷூட்டிங் படு வேகமாக நடந்து வருகிறது. தொடர்ந்து குற்றாலம், செங்கோட்டை பகுதிகளில் ஷூட்டிங் நடக்கிறது. படம் கிட்டத்தட்ட முடிந்த நிலையில் விரைவாக போஸ்ட் புரொடக்சன் வேலைகளை முடித்து ஏப்ரலில் அதாவது தமிழ்ப் புத்தாண்டுக்கு படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார் பாலா. இதில், விஷால் திருநங்கை வேடத்தில் நடிக்கிறார். அதே சமயம் தனக்கு கோபம் வரும் போது, எதிரிகளை துவசம் செய்கிறார் விஷால். இதேபோல் விஷால் பெரிய மரத்தில் தலைகீழாக இறங்கி வரும் காட்சியும் படத்தில் வருகிறதாம். பார்ப்பவர்களை பதைபதைக்கச் செய்யும் காட்சிகளில் இதுவும் ஒன்று என்கிறது படயூனிட்.
Source: Dinakaran
Post a Comment