ஹீரோ ஆனார் ஸ்ரீதேவி உறவினர்
2/26/2011 10:16:46 AM
முன்னாள் ஹீரோயின் ஸ்ரீதேவியின் அக்கா, சூர்யகலா மகன் கார்த்திக். 'கருத்தம்மா'வில் அறிமுகமான மகேஸ்வரியின் தம்பி. 'நடுநிசி நாய்கள்' படத்தில் இரண்டு ஹீரோக்களில் ஒருவராக நடித்துள்ள இவர், தேவா என்று தன் பெயரை மாற்றியுள்ளார். நிருபர்களிடம் அவர் கூறியதாவது: சென்னையில் என்ஜினீயரிங் முடித்து விட்டு, வெளிநாட்டில் எம்.பி.ஏ படித்தேன். நடிப்பு ஆர்வத்தால், கவுதம் வாசுதேவ் மேனனிடம் உதவியாளர் ஆனேன். 'நடுநிசி நாய்கள்' படத்தில் போலீஸ் அதிகாரி கேரக்டரில் நடித்துள்ளேன். தொடர்ந்து நடிக்க விரும்புகிறேன். இயக்குனராகும் எண்ணம் தற்போது இல்லை.
Source: Dinakaran
Post a Comment