2/16/2011 3:43:55 PM
சமீபகாலமாக மலையாள படங்களில் கவர்ச்சி நடிகைகளுக்கு பஞ்சம் ஏற்பட்டது. அதை போக்க வந்திருக்கிறார் சுவேதா மேனன். காண்டம் விளம்பரத்தில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தியவர். தற்போது 'ரதி நிர்வேதம்Õ என்ற படத்தில் நடிக்கிறார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், 'Ôரதி நிர்வேதம்Õ படம் டாப் நடிகர்களின் வசூலை மிஞ்சும். நான் எங்கு போனாலும் ரசிகர்கள் இப்படம் பற்றிதான் கேட்கிறார்கள்.
ரிலீசுக்கு முன் ஷூட்டிங் நடக்கும்போதே அதைப் பார்க்க டிக்கெட் போட்டு ரசிகர்களை அனுமதித்தால் நல்ல வசூல் கிடைக்கும்ÕÕ என்றார்.
இதன் ஷூட்டிங் சமீபத்தில் கேரளாவில் மாவேலிகராவில் தொடங்கியது. சுவேதா நடித்த கிளாமர் காட்சிகள் படமாக்கப்பட்டது. சுவேதா வந்திருக்கிறார் என தகவல் ஊருக்குள் பரவியது. அடுத்த சில நிமிடங்களில் ஊர் மக்களும், அக்கம் பக்கத்து ஊர்களில் இருந்தும் மக்கள் திரண்டனர். ஒரு கட்டத்தில் சுவேதாவை பார்க்க கூட்டம் முண்டியடித்தது. இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டதாம். ஷூட்டிங் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. உடனே போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கட்டுப்படுத்தினர். அதன்பிறகே ஷூட்டிங் நடந்தது.
Post a Comment