2/9/2011 12:03:33 PM
‘நாடோடிகள்’ அனன்யா கூறியது: 'நாடேடிகள்Õ படத்துக்கு பிறகு நிறைய வாய்ப்புகள் வந்தது. கதை பிடிக்காததால் நடிக்கவில்லை. கடந்த வருடம் தமிழில் எனக்கு எந்த படமும் இல்லை. ஆனால் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 13 படங்கள் நடித்துவிட்டேன். ஒரு வருடத்துக்கு பிறகு தனுஷின் 'சீடன்Õ படத்தில் நடிக்கிறேன். இது 'நந்தனம்Õ மலையாள படத்தின் ரீமேக். அதில் நவ்யா நாயர் ஹீரோயின். அப்படத்தை நான் பார்த்தேன். ஆனால் அவரது நடிப்பை காப்பி அடிக்கவில்லை. டைரக்டர் சுப்ரமணியம் சிவா சொல்லிக் கொடுத்ததுபோல் நடித்திருக்கிறேன். தனுஷ் எனக்கு சீனியர். நடிப்பு சம்பந்தமாக நிறைய விஷயங்கள் சொல்லித் தந்தார். எனக்கு நன்றாக சமைக்க தெரியும். கேரளாவில் மாவட்ட அளவில் நடந்த சமையல் போட்டியில் 3 மணி நேரத்தில் 53 உணவு வகைகள் தயாரித்தேன். அதில் எனக்கு பரிசு கிடைத்தது. நடிப்பில் எனக்கென்று பாலிசி வைத்திருக்கிறேன். எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும் கிளாமராக நடிக்க மாட்டேன். நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என்பதைவிட அர்த்தமுள்ள கதைகளில் நடிக்க ஆசைப்படுகிறேன். அடுத்து முருகதாஸ் தயாரிக்கும் படம் உள்பட 2 படங்களில் நடிக்கிறேன்.
Post a Comment