சூர்யாவுக்கு ஜோடியாகிறார் சோனா சின்கா?
2/22/2011 12:08:01 PM
கே.வி.ஆனந்த் இயக்கும் ‘மாற்றான்’ படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கப் போகிறாராம். அட இதிலென்ன ஸ்பெஷல் இருக்கிறது என்று கேட்பவர்கள் காத்திருக்கிறது அதிசயம். இந்தப் படத்தில் மொத்தம் ஐந்து கெட்டப்புகளில் சூர்யா வருகிறார். இந்த ஐந்தில் ஒன்று ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் என்று மீடியாவில் செய்தி கசிந்து பரபரப்பாகப் பேசப்பட்டது. ஆனால் அதனை கே.வி.ஆனந்த் மறுத்துள்ளார். இந்தப் படத்தில் சூர்யா ஜோடியாக ‘தபாங்’ படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக நடித்த சோனா சின்கா நடிப்பார் என கூறப்படுகிறது. ஆனால் இதுவரை, இந்த செய்தியை தயாரிப்பாளர் தரப்போ, இயக்குனரோ உறுதி செய்யவில்லை.
Source: Dinakaran
Post a Comment