2/24/2011 1:56:41 PM
போதைக்கு அடிமையான மாடல் அழகி வேடத்தில் நடிக்க உள்ளார் பிரியாமணி. Ôபேஷன்Õ இந்தி படம் தமிழில் ரீமேக¢ ஆகிறது. இதில் பிரியங்கா சோப்ரா வேடத்தில் நடிக்க முதலில் நயன்தாராவிடம் பேசினர். திருமணத்துக்கு ரெடியாகி வருவதாலும் கவர்ச்சியான வேடம் என்பதாலும் நயன்தாரா மறுத்துவிட்டார். பின் இலியானாவிடம் பேசினர். அதிக சம்பளம் கேட்டதால் அவரும் படத்தில் நடிக்கவில்லை. கடைசியாக த்ரிஷாவிடம் பேசி வருகின்றனர். அவர் இன்னும் ஓகே சொல்லவில்லை. இந்நிலையில் கங்கனா ரனவத் நடித்த வேடத்தில் நடிக்க பிரியாமணியை ஒப்பந்தம் செய்துள்ளனர். கதைப்படி போதைக்கு அடிமையான மாடல் அழகி வேடம் அது. இதில் நடிப்பதற்காக நிறைய மாடல் அழகிகளை நேரில் சந்தித்து பேச உள்ளாராம் பிரியாமணி. நிஜத்தில் போதைக்கு அடிமையாகி, அதிலிருந்து விடுபட்ட மாடல்களையும் பிரியாமணி சந்திக்க படக்குழு ஏற்பாடு செய்து வருகிறதாம். இப்படம் தெலுங்கிலும் ஒரே நேரத்தில் உருவாகிறது. அதிலும் பிரியாமணி நடிக்கிறார்.
Post a Comment